தமிழக காவல் துறைக்கு புதிததாக தேர்ந்தெடுக்கப்பட்ட 8 ஆயிரத்து 538 இரண்டாம் நிலை காவலர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி உடனடியாக ஊரடங்கு பணிகளில் ஈடுபடுத்த காவல் துறை பயிற்சி டிஜிபி கரன் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
தற்போது பணியில் உள்ள காவல்துறையினருக்கும் கொரோனா தொற்று பரவி வருவதால் பாதுகாப்புப் பணியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன்பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குரூப் 4 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி மே 3 ஆம் தேதி அவரவர் தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் உயரதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.