குடும்ப வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்கள் 181, 1091, 122 போன்ற உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஊரடங்கின்போது, குடும்ப சண்டைகளும், பெண்களுக்கான வன்முறைகளும் ஆங்காங்கே நடப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக 181 பெண்கள் உதவி மையம், 1091 காவல்துறை பெண்கள் உதவி மையம், 122 பெண்கள் உதவி எண் ஆகியவை மூலம் தகவல் அளித்தால், குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்களுக்கு தொலைபேசி மூலம் ஆற்றுப்படுத்துதல், மருத்துவ உதவி, குறுகிய கால தங்கும் வசதி, உணவு போன்ற அத்தியாவசிய தேவை மற்றும் சட்ட உதவி ஆகியவற்றினை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் செயல்படுத்தி வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் வரை தங்கள் குழந்தைகளுடன் தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.