ஊரடங்கை காரணம் காட்டி, காய்கறிகள், இறைச்சி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி, விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகளை, மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை - ராயபுரம் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடுதல் விலைக்கு இவ்வாறு பொருட்களை விற்பது மிகவும் தவறு என்றார். தமிழகத்தை பொறுத்தவரை, கொரோனா வைரஸ் தொற்று, கட்டுக்குள் இருப்பதாக கூறிய அவர், தனி நபர் இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட அறிவிக்கப்பட்டு உள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.