கொரோனா சிறப்பு வார்டில் தங்கி சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, SKYPE தொழில்நுட்பம் மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் புதிய சேவை, சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துவக்கப்பட்டு உள்ளது.
ராட்சத திரையில் தோன்றும் மருத்துவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மன தைரியம் கொடுப்பதுடன், பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து வருகிறார்கள்.
சென்னை - கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 23 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ள சூழலில்,11 பேர் மட்டும் தொடர்ந்து தங்கி உள்ளனர்.
உயர்தர சிகிச்சையுடன் இவர்களுக்கு பிசியோதெரபி மற்றும் யோகா உள்ளிட்ட சில பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது.