144 தடை உத்தரவை மீறியதற்காக தமிழகம் முழுவதும் இதுவரை 2 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடை உத்தரவை மீறி அநாவசியமாக வெளியே சுற்றி வருவோர் மீது தமிழக காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இதுவரை விதிமீறலில் ஈடுபட்டது தொடர்பாக 2.24 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விதிமீறலில் ஈடுபட்ட 2.39 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 2.03 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விதிமீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து 1 கோடியே 17 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.