தமிழகத்தின் 9 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும் சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
விருதுநகர், மதுரை, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களிலும், திருத்தணியிலும் வெப்பநிலை 40 டிகிரி செல்ஷியசை ஒட்டி பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பச் சலனத்தால் அடுத்த 24 மணி நேரத்துக்கு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் காலையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், மாலையில் தெளிவாகவும் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.