சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக வரும் திங்கட்கிழமை முதல் நடமாடும் ரத்த மற்றும் சளி மாதிரி சேகரிப்பு மையம் செயல்பட உள்ளது.
அதற்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் மூலம் மாதிரிகள் சேகரிக்கப்படவுள்ளன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக 3 வாகனங்கள் மூலம் ரத்த மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்படவுள்ளன.
சென்னையில் ஏற்கனவே 26 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், மேலும் 14 மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முற்றிலும் முடக்கப்பட்ட பகுதிகள், முதியவர்கள், மாற்று திறனாளிகளுக்காக நடமாடும் மாதிரி சேகரிப்பு மையம் செயல்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.