செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் காவல்நிலையம் முன்பு நடந்து வந்தபடி கானா பாடல் பின்னணியில் வீடியோ வெளியிட்ட நபர் கைது செய்யப்பட்டான்.
நெரும்பூர் கிராமத்தை சேர்ந்த மகேந்திரவர்மா என்ற அந்த இளைஞன் கைன் மாஸ்டர் (KINEMASTER ) என்ற செயலி மூலம் உருவாக்கியுள்ள வீடியோவில் இருபுறமும் கையில் அரிவாளுடன் அவன் நிற்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இணையத்தில் இந்த வீடியோ வைரலான நிலையில் காவல்துறை குறித்து அவதூறு பரப்பியதாக வழக்குப்பதிவு செய்து மகேந்திரவர்மாவை கைது செய்துள்ள போலீசார், அவன் கூட்டாளிகளான பிரபாகரன், ஸ்டீபன் ஆகியோரை தேடி வருகின்றனர்.