ஏப்ரல் 20ஆம் தேதி முதல், மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளை செயல்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட ஆட்சியர்களோடு ஆலோசனை நடத்தினார்.
காணொலிக் காட்சி மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சருடன், துணை முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், சென்னை காவல் ஆணையர், வருவாய் நிருவாக ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கொரோனா ஹாட்ஸ்பாட்டுகளாக குறிப்பிடப்படும் 22 மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பிற மாவட்டங்களில் மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளை செயல்படுத்துவது குறித்தும் மாவட்ட ஆட்சியர்களோடு ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிவிப்பு இன்றே வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.