கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களுக்கு நட்சத்திர விடுதிக்கு இணையாக உணவு மற்றும் இருப்பிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
2 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், கல்லூரி மெஸ் பணியாளர்கள், வெளியேறியதாகவும், தங்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்றும் மருத்துவ மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
நாளை முதல் கோவையில் அம்மா உணவகங்களில் உணவுடன் முட்டை இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறினார்.