கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிக்சை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்மா, என்பது ரத்தத்தில் உள்ள திரவ மூலக்கூறு ஆகும். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவில் ஆன்ட்டி பாடீஸ் எனப்படும் நோய் எதிர்ப்பு அணுக்கள் உருவாகியிருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த எதிர்ப்பு அணுக்களுடனான பிளாஸ்மாவை பாதிக்கப்பட்டவரின் உடலில் செலுத்தும்போது அவர் குணமடைவதற்கான வய்ப்புகள் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக அனுமதி கிடைத்த பின் தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும், அதற்கான கருவிகள் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.