செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
தமிழ்நாடு

தன்னார்வலருக்கு கொரோனா - அதிர்ச்சியில் மாவட்ட நிர்வாகம்

Apr 14, 2020 06:35:21 PM

கோவையில் ஏழை எளிய மக்களுக்கு நேரடியாக உணவு வழங்கி வந்த தன்னார்வலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது உறவினர்கள் உள்ளிட்ட 72 பேரை பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

துடியலூரை அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்த 61 வயது நபர் கொரானா அறிகுறியுடன் தனியார் மருத்துவமனையில் கடந்த 4 நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது.

விசாரணையில் அவர் கடந்த 23ம் தேதி டெல்லியில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இவர் கோவை ஈ எஸ் ஐ மருத்துவமனையில் கொரானா பரிசோதனை செய்துள்ளார். முதற்கட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. இருந்த போதும் மருத்துவர்கள் 14 நாட்கள் வீட்டில் தனிப்படுத்தி இருக்க வேண்டும் என கூறி அனுப்பிவைத்துள்ளனர்.

ஆனால் வீட்டிற்கு வந்த இவர் தனிமைப்படுத்தலை கடைபிடிக்காமல் அப்பகுதி இளைஞர்கள் சிலரை சேர்த்துக் கொண்டு உணவு சமைத்து, தனது காரில் சென்று துடியலூர் காவல்துறையினர், அங்குள்ள அரசு மருத்துவமனை மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கி தன்னார்வலராக செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த மாவட்ட நிர்வாகம், அவர் வசிக்கும் பகுதியில் தடுப்புகள் கொண்டு மறைத்து தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். துடியலூர் அரசு மருத்துவமனை மருத்துவ பணியாளர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த உறவினர்கள் என 32 பேருக்கு நேற்று கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களைத் தொடர்ந்து தன்னார்வலரிடம் உணவு வாங்கி உண்ட 40க்கும் மேற்பட்ட காவலர்களுக்கும் பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கொரோனா பரவுவதால் தன்னார்வலர்கள் யாரும் தன்னிச்சையாக உதவிகள் செய்ய வேண்டாம் என்று அரசு கூறி வருகிறது. இந்த சூழலில் தன்னார்வலர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.


Advertisement
தேனியில் பழுதான சாலைகள், எரியாத தெருவிளக்குகள், அகற்றாத குப்பைகள்
கிணற்றில் விழுந்து 2 வயது பெண் குழந்தை உயிரிழப்பு... கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்காமல் உடலை புதைத்தது ஏன் ?
அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க கோவை வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
நெல்லையில் 17 வயது சிறுவனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய கும்பல்
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசியலுக்காக மக்களைப் பிளவுபடுத்துகின்றனர் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
தெலுங்கு இன மக்கள் பற்றி அவதூறு பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி மீது காவல்நிலையத்தில் புகார்
துப்பாக்கியைக் காட்டி மனைவியை மிரட்டிய அ.தி.மு.க பிரமுகர் கைது
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் 3ஆம் நாள்
விழுப்புரம் அருகே வாகன சோதனையின் போது 491 கிலோ குட்கா பறிமுதல் - ஓட்டுனர் தப்பி ஓட்டம்
லிப்ட் தொழில் நுட்பத்தில் பாம்பன் புதிய தூக்குபாலம்.. இயக்கப்படும் பிரத்யேக காட்சி..!

Advertisement
Posted Nov 05, 2024 in Big Stories,

மாடியில தொட்டிக் கட்டி“காய்கறி தோட்டம் ”நகரத்து பெண் விவசாயி..! வாங்க நாமும் தோட்டம் அமைக்கலாம்

Posted Nov 05, 2024 in உலகம்,Big Stories,

தேர்தலுக்கு தயாராகும் அமெரிக்கா! உலகின் வித்தியாசமான தேர்தல் முறை அதிபர் தேர்வு நடப்பது எப்படி?

Posted Nov 05, 2024 in Big Stories,

எமனாக மாறிய இரும்பு கட்டில்.. தந்தை மகனின் கழுத்தை இறுக்கிய விபரீதம்.. இரும்பு கட்டில் வைத்திருப்போர் கவனத்திற்கு..

Posted Nov 05, 2024 in Big Stories,

கொலை செய்து விட்டு கலெக்டர் ஆபீசுக்கு ஓடிப்போன குண்டு மணி..! இருந்தாலும் ரொம்ப துணிச்சல் தான்..!

Posted Nov 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

லிப்ட் தொழில் நுட்பத்தில் பாம்பன் புதிய தூக்குபாலம்.. இயக்கப்படும் பிரத்யேக காட்சி..!


Advertisement