வேளாண் விளைபொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எந்த அடையாள அட்டையும் தேவையில்லை எனவும், அவற்றைக் காவல்துறையினர் மறிக்கக்கூடாது எனவும் வேளாண்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங்பேடி தெரிவித்துள்ளார்.
சென்னைத் தலைமைச் செயலகத்தில் பேசிய அவர், தமிழகத்தில் ஒரு லட்சத்து மூவாயிரம் டன் யூரியாவும், தேவையான அளவு விதைகளும் இருப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.
அறுவடை வாகனங்களுக்கும் விளைபொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் எந்தத் தடையுமில்லை என அவர் குறிப்பிட்டார்.
உணவுத்துறைச் செயலர் தயானந்த கட்டாரியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தில் நேரடிக் கொள்முதல் நிலையங்கள் மூலம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 972 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.