அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், உணவு, அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்க கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை அரசியல் கட்சிகளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வழங்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பிள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், அவசர வழக்காக கருதி பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் திமுக தலைமை தெரிவித்துள்ளது.