கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்களையும் அத்தியாவசிய பொருட்களையும் நேரடியாக வீடு தேடி சென்று வழங்குவதை தவிர்க்குமாறு, சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்களுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
இவ்வாறு நேரடியாக பொருட்களை வழங்குவதால், வைரஸ் தொற்று பரவும் அபாயம் உருவாகும் என எச்சரித் துள்ள தமிழக அரசு, உதவி செய்ய விரும்புபவர்கள், அந்தந்த பகுதி மாவட்ட ஆட்சியர்கள், மாநகராட்சி ஆணையர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் களிடம் ஒப்படைக்கலாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வாறு ஒப்படைக்கப்படும் பொருட் கள் ஏழை - எளிய மக்களுக்கு சமூக இடைவெளியை கடை பிடித்து, வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு விளக்கம் அளித் துள்ளது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ள தமிழக அரசு, இந்த அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.