சேலத்தில் கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட இந்தோனேஷியர்கள் உள்ளிட்ட 16 பேரை நீதிமன்றக் காவலில் வைக்க சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
11 இந்தோனேஷிய மதபோதகர்கள், சென்னையைச் சேர்ந்த அவர்களின் சுற்றுலா வழிகாட்டி மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த கிச்சிப் பாளையத்தைச் சேர்ந்த 4 பேர் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் அனுமதியின்றி பல்வேறு இடங்களுக்கு சென்றதாகவும் கொரோனா பரவக் காரணமாக இருந்ததாகவும் கிச்சிப்பாளையம் வி.ஏ.ஓ. அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் 16 பேரிடமும் இன்று வீடியோகான்ஃபரன்ஸ் மூலம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்ட சேலம் நீதித்துறை நடுவர் சிவா, அவர்களை வரும் 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டு முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.