கோவையிலுள்ள சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த நபர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தை அடுத்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர், செவிலியர்கள் உட்பட 20 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயிரிழந்த நபர் முன்னதாக சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையும் அடையாளம் காணப்பட்டு மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது என்றார்.