அம்பேத்கர், தீரன் சின்னமலை ஆகியோரின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் சிலைகளுக்கு அரசின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியரே மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்றும், 144 தடை காரணமாக பொதுமக்கள் அந்த நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 14ம் தேதி அன்று டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சி மற்றும் 17ம் தேதி அன்று சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமலில் இருக்கும் வரை, மாவட்டங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் கூடாமல் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.