திருவள்ளூர் அருகே நாகப்பாம்பைப் பிடித்து வித்தை காட்டியதோடு, அதன் பல்லைப் பிடுங்கி கொடுமைப்படுத்திய ஸ்நேக் பாபுவை, வனத்துறை கைது செய்தது.
2 நாட்களுக்கு முன் புட்லூர் உல்லாச நகரைச் சேர்ந்த யுவராஜ், சாலையை கடக்க முயன்ற குட்டி நாகப்பாம்பு ஒன்றைப் பிடித்து வித்தை காட்டியதோடு, அதன் பற்களைப் பிடுங்கி சுற்றி இருந்தவர்களிடம் கெத்து காட்டினார்.
இந்தக் காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமூக வலைதளங்களில் பரப்பி லைக்குகளை அள்ள முயன்றவரை வனத்துறை அள்ளிக்கொண்டு சென்றது. வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் யுவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.