வேலூர் மாவட்டத்தில் மளிகைக் கடைகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயங்கும் என்றும் இறைச்சி மற்றும் மீன் கடைகள் முற்றிலும் தடை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் எந்த வெளிநாட்டுக்கோ, வெளி மாநிலத்துக்கோ செல்லாதவர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்குவது அவசியமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரையே இயங்கும் என்பது உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தடையை மீறி கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளில் வழிபாடுகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இறந்தவர்களின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்காமல் தூய்மைப் பணியாளர்களே இறுதிச் சடங்கு மேற்கொள்வர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.