ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி, குடும்பத்தாரோடும், நண்பர்களுடனும் தொடர்ந்து பேசுவதன் மூலமும், உரையாடுவதன் மூலம், மன அழுத்தத்திலிருந்து எளிதாக விடுபடலாம் என, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். சி.விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், கொரோனா பரவும் இந்த இக்கட்டான நேரத்தில், மன உறுதி என்பது, மிகவும் இன்றியமையாததாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மன உறுதியுடன் இருந்தால் தான், கொரோனா தொற்றுநோய் பரவல் என்ற கடினமான சூழலை கடந்து செல்ல முடியும் என்றும் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
குடும்பத்தினருடன் உரையாடுவதன் மூலமும், நண்பர்களுடன் மலரும் நினைவுகளை, கவலைகளை தொலைபேசி வாயிலாக பகிர்ந்து கொள்வதன் மூலம், மன அழுத்தங்களிலிருந்து விடுபடலாம் என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.