கொரோனாவை முற்றிலும் ஒழிக்க, எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த உத்திகளை வகுப்பதற்காக, ICMR என அழைக்கப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு மூலம் விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாமக யோசனை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி, எழுதியுள்ள கடிதத்தில், ராணுவ வீரர்களை போல கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு, மருத்துவ பாதுகாப்பு கருவிகள் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அன்புமணி, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை மேலும் 3 வாரங்கள் வரை நீட்டிப்பது - விவசாயி களுக்கு, வங்கி கணக்கில் உடனடி யாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த நடவடிக்கை - வறுமை கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு வாரத்திற்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு யோசனைகளையும் அன்புமணி தெரிவித்துள்ளார்.