தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனையின் பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சக ஊழியர்கள் 8 பேர் தனிமைபடுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டை சாலையில் உள்ள ஏவிஎம் மருத்துவமனையில், லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்த பெண் நோய்த்தொற்று அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் அந்தப் பெண் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக ஏவிஎம் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் வெளியேற்றப்பட்டு, மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவமனை முழுவதும் கிருமிநாசினியும் தெளிக்கப்பட்டது.