பத்தாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்வது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்யவேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடுமாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க 11 ஆயிரத்து 771 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு உணவு உள்ளிட்ட இன்றியமையாப் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.