பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் மன உளைச்சலுக்கு உள்ளாகி முடங்கி கிடப்பதாக தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வு என்னாகுமோ என்று பெற்றோரும் தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாலும், மாணவர்கள் தங்கள் கல்வித்திறனை 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்பதாலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறு வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.