செங்கல்பட்டு அருகே எரிசாராயம் குடித்து, ரயில்வே ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
படாளம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கரன், பிரதீப், சிவராமன் ஆகிய அந்த மூவரும் தங்களது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து சனிக்கிழமையன்று எரிசாராயம் அருந்தியதாகக் கூறப்படுகிறது.
வீடு திரும்பிய மூவருக்கும் வயிற்றுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். திருநின்றவூர் பகுதியிலிருந்து அந்த எரிசாராயத்தை அவர்கள் வாங்கி வந்திருக்கக் கூடும் என்று கூறப்படும் நிலையில், அதனை அருந்திய மற்றவர்கள் நிலை என்ன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.