தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் செல்போன் கடை உரிமையாளருக்குக் கொரோனா உள்ளது தெரியவந்ததால் ஊர் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
நிசாமுதீன் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பிய ஆத்தூர் செல்போன் கடை உரிமையாளருக்குப் கொரோனா இருப்பது சோதனையில் தெரியவந்தது.
இதனால் அவருக்கு அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஆத்தூர் முழுவதும் தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தூத்துக்குடி- திருச்செந்தூர் செல்லும் சாலைகள் மூடப்பட்டுள்ளன. உணவுப் பொருள் ஏற்றி வரும் வாகனம், மருத்துவ ஊர்தி ஆகியன மட்டும் அந்த வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
மருந்தகங்களைத் தவிரக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல், சளி இருக்கிறதா என ஆய்வு செய்து வருகின்றனர்.