கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார்.
தலைமை செயலகத்தில் இருந்தபடி நாளை காலை 11 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.
ஊரடங்கு அமல், அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை, கட்டுப்பாடுகளை முறையாக அமல்படுத்துவது, கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.