கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 7ம் தேதி நடைபெறவிருந்த பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு அறையை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி இன்று ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிரிவலத்துக்காக யாரும் திருவண்ணாமலை வர வேண்டாம் என்று கூறினார். திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செய்யார் ஆகிய 4 நகராட்சிகளில் வீடு-வீடாக தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளை கொண்டு, கொரோனா அறிகுறி உள்ளதா என விவரம் சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.