பிரதமர் மோடியின் அழைப்பையேற்று நாளை இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை மக்கள் அணைக்கும் தருணத்தில், மின்விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், மின்கட்டமைப்பில் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மின்சார வாரியத்தால் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மற்ற மின் உபகரணங்களை மக்கள் வழக்கம்போல் இயக்கத்தில் வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என்றும், அதுகுறித்து பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.