தர்மபுரியில் ஊரடங்கு உத்தரவை மீறிய இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி போலீசார் சேதப்படுத்தினர்.
வாகன சோதனையின் போது, இரு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார், உரிய காரணத்துக்காக வெளியே வந்தவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர். அதேநேரம், எவ்வித காரணமும் இல்லாமல் வெளியே நடமாடிய இரு சக்கரவாகனங்களின் முகப்பு விளக்கு, இன்டிகேட்டர் உள்ளிட்டவைகளை, போலீசார் லத்தியால்
அடித்து உடைத்தனர்.
குடும்பத்தினருடனும், குழந்தைகளுடனும் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள், போலீசாரின் திடீர் தாக்குலால் நிலை குலைந்தனர். தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவை பின்பற்றி வீட்டில் இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை வாகன ஓட்டிகளுக்கு ஏற்பட்டிருக்காது. அதே சமயம் போலீசாரும் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் லத்தியை சுழற்றி வாகனங்களை அடித்து நொறுக்கியது வரம்பு மீறிய செயல் எனும் விமர்சனம் எழுந்துள்ளது-