கொரோனா நோய் தடுப்பு, நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அரசின் கோரிக்கையை முழு மனதோடு ஏற்று, அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவிப்பதாக கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், அதிமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை அளிப்பார்கள் எனவும், கொரோனா நோய் தடுப்பு மற்றும் மருத்துவ வசதிகளை அளிப்பதற்கான சிறப்பு நிதிக்கு எம்பிக்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயும், எம்எல்ஏக்கள் தலா 25 லட்சம் ரூபாயும் வழங்குவார்கள் என ஏற்கெனவே அறிவித்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.