கொரோனா நோய்த்தடுப்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஏப்ரல் இரண்டாம் தேதி வரை மொத்தம் 62 கோடியே 30 லட்ச ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1, 2 ஆகிய 2 நாட்களில் மட்டும் 25 கோடியே 96 லட்ச ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டுள்ளது. சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் 4 கோடி ரூபாயும், டாஃபே நிறுவனம் 3 கோடி ரூபாயும் வழங்கியுள்ளன.
ராம்கோ சிமென்ட்ஸ் இரண்டரைக் கோடி ரூபாய், பிரேக்ஸ் இந்தியா நிறுவனம் 2 கோடி ரூபாய், வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஒன்றேகால் கோடி ரூபாய் வழங்கியுள்ளன.
துணைமுதலமைச்சரின் மகன் ஜெயபிரதீப், டர்போ எரிசக்தி நிறுவனம், சுந்தரம் ஹோம் பைனான்ஸ், சாரிட்டீஸ் எய்ட் பவுண்டேசன் ஆகியோர் தலா ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளனர். நன்கொடை அளித்த நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.