தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 23 லட்சத்து 40 ஆயிரத்து 778 பேருக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை மற்றும் விலையில்லா உணவு பொருட்களை வழங்கும் பணியை அவர் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் காமராஜ், தற்போது வரை பதினொன்றரை சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும், ஒவ்வொரு நியாய விலை கடைகளிலும் நாள் ஒன்றுக்கு நூறு பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படுகிறது என்றும் கூறினார்.