தேனி புதிய பேருந்து நிலையத்தில், அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தையை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் பார்வையிட்டனர்.
தொடர்ந்து, 2,000 ரூபாய்க்கு, 27 வகை மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பை, வீட்டிலேயே வினியோகிக்கும் திட்டத்தை, துவக்கி வைத்த துணை முதலமைச்சர், போடியில் உள்ள அம்மா உணவகத்தில், ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் முயற்சியில், 18 வகை காய்கறிகள், 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.