கொரோனா தடுப்பு நடவடிக்கை நிதியாக போக்குவரத்து ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமான 14 கோடியே 10 லட்சம் ரூபாய் முதலமைச்சரிடம் வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லியில் இருந்து கரூர் திரும்பிய 40 பேரில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மீதமுள்ள 38 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக கூறினார்.