தமிழ்நாட்டில் இதுவரை 234 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டெல்லியில் மதம் தொடர்பான நிகழ்வில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற அனைவரும் தாமாக முன்வந்து தகவல் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு இருப்பவர்களின் எண்ணிக்கை 77,330 என்று கூறிய அவர், 28 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறை முடிந்து 4,070 பேர் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்றுநோய் மிக எளிதாக முதியவர்களை தொற்றிக்கொள்ளும் ஆபத்து உள்ளதாகக் குறிப்பிட்ட பீலா ராஜேஷ், ஒருபோதும், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.