ஊரடங்கு உத்தரவால் விற்பனைக்கு அனுப்ப முடியாத பூத்துக் குலுங்கும் பூக்களை, வேறு வழியில்லாமல் விவசாயிகள், டிராக்டரை ஏற்றி அழித்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள தேவூர், வட்ராம் பாளையம், பெரமிச்சிபாளையம், மேட்டுப்பாளையம், காவேரிப் பட்டி, கல்வடங்கம் , கோனேரிப் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் விவசாயி கள் சாமந்தி, செண்டுமல்லி, குண்டுமல்லி, கோழிக்கொண்டை ஆகிய பூக்களை இந்த ஆண்டு அதிக அளவில் பயிரிடப்பட்டிருந்தனர்.
போக்குவரத்து முற்றிலும் முடங்கி விட்டதால், வெளியூர்களுக்கு விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தவித்த விவசாயிகள், பூக்கள் பயிரிட்ட காடுகளை டிராக்டர் மூலம் அழித்து மாற்று விவசாயத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ள எடப்பாடி பகுதி விவசாயிகள், தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்குமாறு, கோரிக்கை விடுத்துள்ளனர்.