கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக தமிழக முதலமைச்சரின், பொது நிவாரண நிதிக்கு இதுவரை 36 கோடி ரூபாய் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மற்றும், சக்தி மசாலா நிறுவனம் தலா 5 கோடி ரூபாயும், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் சிம்சன்ஸ் நிறுவனம் தலா 2 கோடி ரூபாயும் மற்றும் சண்முகா நிறுவனம் 1 கோடியே 25 லட்ச ரூபாயும் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எஸ்.ஆர்.எம் மிஸ்ட் நிறுவனம் 1 கோடியே 15 லட்சமும், தமிழக ஆளுநர் அலுவலகம் மற்றும் திமுக அறக்கட்டளை சார்பில் தலா 1 கோடி ரூபாயும் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.