கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்காகத் தமிழக அரசுக்கு 37 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்பிலான 500 வென்டிலேட்டர்களை வழங்க எச்.சி.எல். நிறுவனம் முன்வந்துள்ளது.
இது குறித்துத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கொரோனா வைரஸ் நோய் நிவாரண நடவடிக்கைகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்குப் பொதுமக்களும் நிறுவனங்களும் பங்களிப்பை மனமுவந்து அளித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
எச்.சி.எல். நிறுவனம் 37 கோடியே 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 500 வெண்டிலேட்டர்களைத் தமிழக அரசுக்குத் தர முன்வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
சூழ்நிலை கருதி எச்.சி.எல் நிறுவனம் செய்த இந்த உதவிக்குத் தமிழக மக்களின் சார்பில் நன்றியையும் பாராட்டையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.