திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கொரோனா ஆய்வுக்குச் சென்றவர்கள் சி.ஏ.ஏ. கணக்கெடுப்புக்கு வந்ததாகக் கூறி சிறைப்பிடிக்கப்பட்டனர்.
வாணியம்பாடியில் இருந்து டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு சென்று வந்த 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டு மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதையடுத்து நகரம் முழுதும் காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சுகாதாரப் பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் அவர்கள் சி.ஏ.ஏ. கணக்கெடுப்புக்கு வருவதாகவும் ஒத்துழைக்க வேண்டாமென்றும் சமூக வலைதளம் மூலம் உருது மொழி ஆடியோ பரப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனை அடுத்து கொரோனா ஆய்வுக்கு சென்றவர்களின் ஐ.டி. கார்டுகளை பறித்து சிறைப்பிடித்த சிலர், ஆய்வுச் சீட்டுகளையும் கிழித்தெறிந்ததாகக் கூறப்படுகிறது. சிறைப்பிடிக்கப்பட்டவர்களை மீட்ட போலீசார், இருவரை கைது செய்து தப்பி ஓடிய பலரை தேடி வருகின்றனர்.