ஊரடங்குக்கு கட்டுப்பட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளுக்குள்ளேயே இருக்கக்கோரி தமிழக காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதிலும், சேவை செய்வதிலும் பெருமிதம் அடைவதாக ஆங்கில வாசகத்துடன் தொடங்கும் வீடியோவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்வது, அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அவரும், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கோரிக்கை விடுப்பது உள்ளிட்ட காட்சிகள் உள்ளன.
இதேபோல் சுகாதார ஊழியர்கள், போலீஸார் ஆகியோர் ஊரடங்கு காலத்தில் எடுத்து வரும் பணிகள் குறித்த காட்சிகளும் அதில் உள்ளன.