செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

ஈஷா சிவராத்திரி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அறிகுறி இருந்தால் கொரோனா பரிசோதனை-முதலமைச்சர் அறிவிப்பு

Apr 01, 2020 03:48:38 PM

ஈஷா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அறிகுறி இருந்தால் அவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை சாந்தோம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும், அம்மா உணவகங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு விற்பனை செய்யப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், நலிவுற்ற மக்களுக்காக கொண்டு வரப்பட்ட அம்மா உணவக திட்டம் மூலம், நாளொன்றுக்கு நான்கரை லட்சம் பேர் உணவருந்துகின்றனர் என்றார். மேலும் டெல்லி மாநாட்டில் கலந்துக்கொண்டவர்கள் நோயின் தாக்கத்தை உணர்ந்து தாங்களாக முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய முதலமைச்சர், ஈஷா சிவராத்திரி கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அறிகுறி இருந்தால் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

ஒவ்வொரு உயிரும் முக்கியம். ஒருவர் கூட பாதித்துவிடக் கூடாது என்பதே அரசின் நோக்கம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நோய் தாக்கத்தை உணராமல் சிலர் வெளியே சுற்றுகின்றனர், மருத்துவமனையில் துடித்து கொண்டிருப்பதை பார்த்த பிறகும் 144 தடை உத்தரவை சிலர் அலட்சியம் செய்கிறார்கள் என அவர் குறிப்பிட்டார். ஊரடங்கால் விவசாயிகள் மேற்கொள்ளும் எந்தப் பணிகளுக்கும் தடை இல்லை என்றும் வேளாண் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். ஏப்ரல் 14க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பதை மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக சாந்தோமிலுள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், அங்கு விற்பனை செய்யப்படும் உணவை வாங்கி சாப்பிட்டார். மேலும் அங்கு உணவருந்திய பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சர், அம்மா உணவக ஊழியர்களிடம் சமூக இடைவெளியை பின்பற்றி விற்பனை செய்யவும், உணவகத்தை சுகாதாரமாக பராமரிக்கவும் அறிவுறுத்தினார்.


Advertisement
சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை பிடித்த கும்பகோணம் மாநகராட்சி ஊழியர்கள்..
தேவாலய நில மோசடி வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றம் - மதுரை உயர்நீதிமன்றம்
கனமழையால் குறுவை நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் வேதனை
கோவா கடல் பகுதியில் விசைப்படகு மீது நீர்மூழ்கி கப்பல் மோதி விபத்து..
வேலூரில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி..
குற்றச் செயல்களில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கிறது - அமைச்சர் சேகர் பாபு
போக்ஸோ வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 25 ஆண்டு சிறை தண்டனை
இயக்குநர் பா.ரஞ்சித், கானா இசைவாணி மீது புகார்
வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டு 4 வயது குழந்தை உயிரிழப்பு
ஆந்திர மாநில பக்தர்கள் வந்திருந்த பேருந்தில் ஏறி திருட முயற்சி... போலீசில் பிடித்துக் கொடுத்த பொதுமக்கள்

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement