வாடகைக்கு குடியிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களிடம், உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு வாடகை கேட்கக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு தற்காலிக தங்குமிடம், உணவு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்ட காலகட்டத்திலும், பணியாளர்களுக்கு உரிய தேதியில், உரிய கூலியை கொடுத்து விட வேண்டும்.
வாடகைக்கு குடியிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களிடம், வீடு அல்லது தங்குமிட உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கு வாடகை கேட்கக் கூடாது.
தங்குமிடங்களில் இருந்து மாணவர்கள், தொழிலாளர்களை வெளியேற்ற முயற்சித்தால் சட்ட நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் அரசாணையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.