செமஸ்டர் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக, சில தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் சோதனைத் தேர்வு நடத்துகின்றன.
பொறியியல் கல்லூரிகளில் பயிலும் சுமார் 3 லட்சம் மாணவர்களுக்கு மே, ஜூன் மாதங்களில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கு தயாராகும் விதமாக ஆன்லைன் மூலம் தேர்வுகள் வைக்கும்படி பேராசிரியர்களுக்கு சில தனியார் கல்லூரி நிர்வாகங்கள் உத்தரவிட்டுள்ளன.
அதன்படி பேராசிரியர்கள் மாணவர்களை வாட்ஸ்அப் மூலம் ஒருங்கிணைத்து, தினமும் ஒரு பாடம் சார்ந்த கேள்வித்தாளை பதிவிடுகின்றனர். அடுத்த மூன்று மணி நேரத்திற்குள், மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே அந்த கேள்விகளுக்கு விடைகளை எழுதி வாட்ஸ்அப் அல்லது இமெயில் மூலமாக பேராசிரியர்களுக்கு அனுப்ப வேண்டும்.
அந்த விடைத்தாள்களை பேராசிரியர்கள் வீட்டிலிருந்தபடியே திருத்தி மதிப்பெண்களை அளிக்கின்றனர். தவறான விடை அளித்த மாணவர்களுக்கும், பாடப்பகுதியில் உள்ள சந்தேகங்களுக்கும் பேராசிரியர்கள் விளக்கமும் அளிக்கின்றனர்.