வங்கிகளில் கடன் பெற்றவர்கள் அடுத்த 3 மாதங்களுக்கு இஎம்ஐ கட்டத் தேவையில்லை என தமிழ்நாடு அரசின் நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில், சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில், இந்தியன் வங்கி சார்பில், நடமாடும் ஏடிஎம் சேவைத் தொடங்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இந்த நடமாடும் ஏடிஎம் சேவையை, தமிழ்நாடு அரசின் நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் இந்தியன் வங்கி மேலாண் இயக்குநர் பத்மஜா சந்துருவுடன் இணைந்து, செய்தியாளர்களை சந்தித்த நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன், வங்கிகளுக்கு, ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளவாறு, அடுத்த 3 மாதங்களுக்கு, இஎம்ஐ கட்டத் தேவையில்லை என்றார்.
இதுகுறித்து, அனைத்து வங்கிகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அனைத்து மாவட்டங்களிலும், ஏடிஎம்கள், 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஏடிஎம்களுக்கு தடையின்றி பணம் எடுத்துச் செல்ல அனைத்து வகை ஏற்படுகளையும் செய்துத்தருமாறு, ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் கூறியுள்ளார்.