தமிழகம் முழுவதும் உள்ளாட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகள் செலுத்த 3 மாத கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்த காலஅவகாசம் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். கேரளாவில் உள்ள தமிழர்களுக்குத் தேவையான உதவிகளை செய்ய அங்குள்ள அமைச்சர்களிடம் பேசியிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.