சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் சுற்றி வந்தவர்களைப் பிடித்து, போலீசார் தோப்புக்கரணம் போடவைத்தனர்.
வெறிச்சோடி கிடக்கும் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் வெறித்தனமாக சுற்றிக்கொண்டிருக்கும் புள்ளிங்கோக்கள் போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றனர்.
எத்தனை முறை எச்சரித்தாலும் கண்டுகொள்ளாமல் வீதியுலா செல்வோரைப் பிடித்து தோப்புக்கரணம் போடவைப்பது, "இனி வெளியில் வரமாட்டோம், சட்டத்தை மதிப்போம்" என்ற வாசகம் எழுதிய பதாகைகளை ஏந்தவைப்பது என விதவிதமான தண்டனைகளை வழங்கி வருகின்றனர்.
நாடு இருக்கும் அசாதாரண சூழலில், கொரோனா பரவலின் வீரியத்தையும் விபரீதத்தையும் புரிந்துகொண்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க அனைத்துத் தரப்பு மக்களும் தன்னிச்சையாக முன்வர வேண்டும் என போலீசார் வேண்டுகோள் வைக்கின்றனர்.