டெல்லியில் இருந்து நாமக்கல் மாவட்டம் திரும்பிய 26 நபர்கள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
கடந்த 23 ஆம் தேதி திரும்பிய இவர்கள் நேற்று கண்டறியப்பட்டு, நாமக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் 18 நபர்களும், ராசிபுரம் அரசு மருத்துவமனையில் 6 நபர்களும், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் 2 நபர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கலில் இவர்கள் வசித்த 7 தெருக்கள் மற்றும் இராசிபுரத்தில் 4 தெருக்களில், மக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு தடுப்பு கட்டைகள் அமைத்து போலீசார் நிறுத்தப்பட்டுள்ளதுடன், மருத்துவக்குழுவும் தயார் நிலையில் உள்ளனர்.
இதுதவிர வெளி நாடு மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து திரும்பிய மேலும் 850 நபர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி வைத்து மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.