கொரோனா பரவலைத் தடுக்கக் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியீட்டுள்ளது.
அதில் சந்தைகள், மருந்தகங்கள், மருத்துவமனைகளில் ஒருவருக்கொருவர் குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி பராமரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
இன்றியமையாப் பொருட்கள், மருந்துகள் வாங்கும்போது அமைதியாகச் சென்று வாங்கி வர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
மளிகைப் பொருட்கள், மருந்துகள் வாங்க அடிக்கடி கடைக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
ஒருவரை வாழ்த்தும்போது கைகுலுக்குவதையும் கட்டிப்பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் வீட்டில் உறவினர்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தியுள்ளது.
யாரையும் வீட்டுக்குள் வர விட வேண்டாம் என்றும், யாருடைய வீட்டுக்கும் செல்ல வேண்டாம் என்றும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.